பொள்ளாச்சி நகராட்சி அண்ணா நகா் 3-வது வீதியில் குப்பைகள் மலை போல் போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வே நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.