கோவையில் உள்ள புதிய பூ மார்க்கெட் பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு மழை பெய்து வருவதால் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு சென்று வரும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.