சுகாதார சீர்கேடு

Update: 2022-09-02 12:00 GMT

பொள்ளாச்சி நகராட்சி சர்க்கஸ் மைதானத்தில் இருந்து பல்லடம் ரோட்டிற்கு செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அந்த பகுதியில் நகராட்சி பள்ளி, அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆனால் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொண்டு வந்து மூட்டை, மூட்டையாக கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவற்றை அகற்றவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்