கடலூரில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து கிழே இறங்க வைத்துள்ள படிக்கட்டுகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகர மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க கடலூர் ரெயில்வே மேம்பாலத்தில் சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.