குப்பையால் சுகாதார சீர்கேடு
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 47-வது வார்டு புற்றுக்கண் ஸ்ரீநாகாத்தம்மன் கோவில் அமராவதி பாளையம் ரோடு அங்காளம்மன் நகர் காட்டுப்பாளையத்தில் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த குப்பைகளால் கொசுத்தொல்லை அதிகமாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சையத்சலாவுத்தீன்,திருப்பூர்.
70109 92003