சிவகங்கை மாவட்டம் இளையான்குடி துணைமின்சார வாரியத்தின் பின்புறம் கழிவுகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. தேங்கிய கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.