பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் சிலர் குப்பைகளை மலைப்போல் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.