ஊட்டி உட் கார்க் ரோடு சாலையில் மழை நீர் கால்வாய் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் தூர்வாரப்பட்டது. இதைத் தொடர்ந்து தூர்வாரப்பட்ட குப்பைகள் சாலையோரம் போடப்பட்டுள்ளதால் அந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.