குவிந்து கிடக்கும் குப்பை
திருப்பூர் பொன்னம்மாள் நகர் 3-வது வீதி, பூலுவபட்டி, 2-வது வார்டு பகுதியில் பலமுறை புகார் அளித்ததில் பலனாக 3 குப்பை தொட்டிகள் வைத்தும், குப்பை தொட்டிகள் அள்ளப்படுவதில்லை. ஆதலால் குப்பைகள் அதிகளவில் நடைபாதை முழுவதுமாக எந்த வாகனமும் உள்ளே நுழையாதபடி குவிந்து கிடக்கின்றன. அதுமட்டுமின்றி மாநகராட்சி ஊழியர்கள் வேறு இடத்தில் சுத்தம் அள்ளிய குப்பைகளையும் இங்குவந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். எனவே குப்பை கொட்டும் மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்து தருமாறும் மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்ரீராம்,திருப்பூர்.
9791500654