சுகாதார சீர்கேடு

Update: 2022-08-30 16:01 GMT

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் பாரதிநகர் செல்லும் வழியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டி நிறைந்து வழிவதால், சிலர் அந்த குப்பை தொட்டியின் அருகேயே குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு முறையாக குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்