மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் முறையான குப்பைத்தொட்டிகள் இல்லை. இதன்காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால் சாலையில் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையாக குப்பைத்தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?