காவிரி துலாகட்டத்தில் குவிந்த குப்பைகள்

Update: 2022-07-10 14:09 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கோவில்கள் நிறைந்த பகுதியாகும். காவிரி ஆறு செல்லும் மயிலாடுதுறை புண்ணியநகரமாகவும் கருதப்படுகிறது. மயிலாடுதுறையில் உள்ள காவிரி கரையில் துலாகட்டம் என்ற படித்துறை உள்ளது. இங்கு நீராடுவது பல்வேறு ஐஸ்வர்யங்களை தரும் என நம்பப்படுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் துலாகட்டத்தில் நீராட மயிலாடுதுறை வருகின்றனர். இந்த நிலையில் துலாகட்டம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக காவிரி துலாகட்டத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துலாகட்டத்துக்கு நீராட வரும் பக்தர்கள் முகம் சுழித்தபடி குப்பைகளை கைகளால் தள்ளிவிட்டு நீராடி செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவிரி துலாகட்டத்தில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றவும், துலாகட்டத்தை சுத்தமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்