பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-10 11:25 GMT

தஞ்சை பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அதிகளவில் வருகின்றனர்.இதனால் தஞ்சை பழைய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் இருந்து கழிவுநீர் நடைபாதைகளில் ஊற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் முறையாக குப்பைகளை அகற்றவும், கடைகளில் இருந்து கழிவுநீர் நடைபாதையில் ஊற்றப்படாமலும் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்