திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சென்னீர் குப்பம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் குப்பைகள் அதிகளவு கொட்டபட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுடுகாட்டை கடந்து செல்லும் பாதசாரிகள் முகம் பொத்திக்கொண்டு செல்லும் நிலை இருக்கின்றது. குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.