நாமக்கல்லில் சேலம் ரோடு தொடக்கத்தில் நூலகம் ஒன்று அமைந்துள்ளது. அதற்கு எதிர்ப்புறம் பழைய கட்டிடம் ஒன்று காணப்படுகிறது. அங்கு சாக்கடையை கால்வாயை தூர்வாரி விட்டு கழிவுகளை அங்கேயே போட்டுவிட்டனர். இதனால் நூலகத்தை கடக்கும் போதெல்லாம் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் கழிவு நீருடன் கலந்துவிடுகிறது. இதனால் கொசு மற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி விட்டு கழிவுகளை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.