ஊட்டி மார்க்கெட்டில் இருந்து மாரியம்மன் கோவில் செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நகராட்சி வணிக வளாகத்தில் மழை பெய்து பாசி படிந்து கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து உள்ளது. எனவே அந்த வணிக வளாகத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.