பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி திருநகரில் இருந்து இடும்பன் கோவில் செல்லும் சாலையோரம் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு முறையாக குப்பை அள்ளப்படாததால் குப்பைகள் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு தண்ணீர் தேங்கும் சூழல் நிலவுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் முறையாக குப்பையை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமா?