கோபியிலிருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் கீழ் ஏராளமான குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. உடனே குப்பையை அகற்றாவிட்டால் ஓடையில் தண்ணீர் வரும்போது தேங்கி அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடும். நகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்ற ஆவன செய்வார்களா?