செங்கம் பேரூராட்சியில் காய்கறி, பழங்கள் விற்பனை கடைகள் உள்ளன. அத்துடன் நடமாடும் பழக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளன. செங்கம்-போளூர் தேசிய நெடுஞ்சாலையில் மில்லத் நகர் முதல் தொடங்கி குயிலம் கூட்ரோடு, நீதிமன்றம் செல்லும் ரோடு, போளூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் கெட்டுப்போன காய்கறிகள், பழ வகைகளை சாலையின் இரு பக்கமும் வியாபாரிகள் வீசுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அஜித், ெசங்கம்.