மொரப்பூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் செடிகள், முட் புதர்கள் போல் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி விஷ ஜந்துக்கள் வசிக்கும் இருப்பிடமாக மாறி உள்ளதால் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே மொரப்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் உள்ள செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.