சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து குமாரபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் அரசிராமணி மூலப்பாதையில் 4 சாலைகள் சந்திக்கும் வளைவு உள்ளது. இந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’யில் கடந்த 10-ந் தேதி படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக சாலையில் தோன்றிய பள்ளம் சீரமைக்கப்பட்டது. எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.