தடுப்பு சுவர் இல்லா கிணறு

Update: 2025-12-07 06:35 GMT



செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் மண்டலம், அனகாபுத்தூர் கிராமம், காரிகாலன் நகர், செங்குட்டுவன் தெருவில் பழைமையான கிணறு ஒன்று உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் நிறைந்து காணப்ப்படும் இந்த நீர் ஆதாரத்தை சுற்றி பாதுகாப்பான தடுப்புசுவர் இல்லாமல் காணப்படுகிறது. சிறுவர்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் 'ஆபத்தை' விலை கொடுத்து வாங்கும் நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். கிணற்றினை சுற்றி தடுப்புச்சுவர் அமைத்து, துறைசார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்