தெருநாய்கள் தொல்லை

Update: 2025-10-12 11:10 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு ராஜவீதி மற்றும் எம்.ஜி.ஆர். சிலை, அண்ணா சிலை, மின்வாரிய அலுவலகம், பழைய பஸ்நிலையம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் குழந்தைகள், முதியவர்களை பார்த்து குரைத்துக்கொண்டே கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் அச்சத்துடனேயே நடமாடுகின்றனர். மேலும் மாடுகள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் மற்றும் மாடுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்