கோபி புதுக்காடு அருகே நஞ்சகவுண்டன்பாளையம் சின்னசாமி 3-வது வீதியில் உள்ள மின் கம்பத்தின் அடி பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பிரிவில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் அங்கு சென்று மின் கம்பத்தின் அடிபகுதியில் கான்கிரீட் அமைத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின் வாரிய அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.