காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியிலுள்ள படப்பை மணிமங்கலம் செல்லும் பகுதியில் குப்பை குவியல் மலைபோல் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்கள், குழந்தைகள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். கால்நடைகளும் அவதி அடைந்து வருகிறது. இந்த குப்பைகளை முழுமையாக அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிடுமா?