சென்னை பெரம்பூர் எஸ்.ஆர்.பி காலனி 9-வது மற்றும் 14-வது தெருக்களில் கடந்த 4 நாட்களாக மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளது. மேலும் அதில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் தெருவில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே தெருவில் பள்ளிக்கூடம் இருப்பதால், அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.