சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் இருந்து மாம்பலம் ரெயில் நிலையம் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் பழுதடைந்து இயங்காமல் உள்ளது. இதனால் சாலைவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடப்பதற்குள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் அடிக்கடி இந்த போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதால் விரைவில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.