ஆபத்தசெங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பாலகிருஷ்ணன் தெருவில் மின்சார கம்பிகள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து செல்வோர் கையால் தொடும் தூரத்தில் உள்ளது. இதனால் அப்பகுதியினர் தெருவில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் இருப்பதால் மின்சார துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து மின் கம்பியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.