வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூரில் இருந்து மலையம்பாக்கம் செல்லும் சர்வீஸ் சாலையின் இரண்டு பகுதிகளிலும் பத்துக்கும் மேற்பட்ட காயலான் கடைகள் அதிக அளவில் உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய வாகனங்களில் கொண்டு வரப்படும் திருட்டு பொருட்களை இந்த காயலான் கடைகளில் கொடுக்கப்பட்டு பண பரிமாற்றமும் நடைபெறுகிறது. இதனால் இந்த பகுதிகளில் குற்ற சம்பவம் அதிகரித்துள்ளது. சர்வீஸ் சாலையில் உள்ள காயலான் கடைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.