காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் உள்ள படப்பை, ஒரகடம், உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாலையோர உணவகங்களிலும், கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் சாலை ஓரங்களிலும் வீசப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?