சென்னை பெருங்குளத்தூர் ரெயில் நிலையம் செல்லும் சாலை பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி பெருங்களத்தூர் ரெயில் நிலையம் செல்லும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.