காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து செல்லும் கழிவு நீர் கால்வாயை தொடர்ந்து பாலாற்றில் கலந்து வருகிறது. மேலும் நீர் ஆதாரமான பாலாற்று பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. குடிநீர் ஊற்றுப் பகுதியில் கழிவு நீர் கலந்து தொற்று நோய் பரவும் முன்பு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.