வில்லிவாக்கம் தெற்கு ஜெகன்நாதா நகர் 5-வது குறுக்கு தெரு பகுதியில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இன்னும் கால்வாய் அமைக்கும் பணி முடிவுபெறாமல் பாதியிலேயே நிற்கிறது. தெரு ஓரத்தில் இந்த பள்ளம் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே கால்வாய் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடித்திட வேண்டுகிறோம்.