செங்கல்பட்டு மாவட்டம், செட்டி புண்ணியம் பகுதியில் உள்ள தனியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள் செட்டி புண்ணியம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் இந்த ரெயில்வே கேட்டை காத்திருந்து சாலையை கடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.