செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி சுடுகாட்டை அதிகமான முட்புதர்களும், புற்களும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய செல்வோர் சிரமத்துடனேயே செல்கின்றனர். எனவே ஊராட்சி மன்ற நிர்வாகம் சுடுகாட்டை சுத்தம் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.