சரவம்பாக்கம் ஊராட்சியில் ஒரு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 2017-2018 ஆம் ஆண்டில் மரக்கன்று நட்டதற்கு, ஏரிகள் ஆழப்படுத்தியதற்கு, வரிக்கால்வாய்கள் சீரமைத்ததற்காக ரூபாய் 4 கோடி செலவானது என்று எழுதிய பலகை வக்கப்பட்டிருந்தது. ஆனால் மேற்கூறிய எந்த பணிகளும் இதுவரை செய்யப்படவில்லை என ஊர் மக்கள் சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள அந்த புகாரை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.