சென்னை கொரட்டூர் மாதனாங்குப்பம் ஆண்டாள் கோவில் தெரு அருகில் பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குப்பைகளை அகற்றியுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.