சிதிலமடைந்த கட்டிடம்

Update: 2022-08-17 14:37 GMT

மதுராந்தகம் அருகே காவாதுார் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு நடுநிலைப்பள்ளி எதிரே காவாதுார், விளாகம், முருக்கஞ்சேரி ஆகிய மூன்று கிராமங்களுக்கும் ஒருங்கிணைந்த கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் 19-ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தால் தற்போது சிமெண்ட் பூச்சு உதிர்ந்தும், சிதலமடைந்தும் காணப்படுகிறது. மழைக்காலங்களில் கட்டிடத்தின் உள்ளே மழை நீர் கசிந்து வருகிறது. கட்டிடத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்