நடைபாதை சுடுகாட்டுக்கா? மக்கள் ஆதங்கம்

Update: 2022-08-17 14:19 GMT

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள பாபு ஜெகஜீவன் சாலையில் இருக்கும் நடைபாதை ஆபத்தாக காட்சி தருகிறது. நடைபாதையில் பள்ளம் விழுந்தும், பாதாள சாக்கடையின் மூடி சேதம் அடைந்தும், பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத சூழலில் நடைபாதை இருக்கிறது. இதனால் மக்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. வாகனங்கள் வேகமாக வருவதால் சாலையில் நடந்து செல்லவே பயமாக இருப்பதாகவும், இந்த நடைபாதையில் பயணம் செய்தால் சுடுகாட்டுக்கு தான் செல்ல வேண்டி வரும் என்றும் மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்