செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர், கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள யாதவர் தெருவின் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே யாதவர் தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.