சென்னை கொளத்தூர் மாதனாங்குப்பம், சேனைத்தலைவர் நகரில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கல்லூரி அருகே உள்ள பொன்னையன் தெரு சாலை மட்டும் சீர் செய்யப்படாமலே உள்ளது. மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் அவதியுறும் சூழல் அமைகிறது. ஆகவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.