சென்னை அபிராமபுரம் 3-வது தெருவில் உள்ள பட்டு போன மரம் ஆபத்தாக இருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக பட்டுபோன மரம் வெட்டப்பட்டுள்ளது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கைக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.