சென்னை திருவொற்றியூரிலிருந்து மணலி செல்லும் சாலையில் பக்கிங்காம் கால்வாய் மீது கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலம் அமைக்கும் பணியால், மணலி செல்வதற்கு 5 கிலோமீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வழி செய்ய வேண்டும்.