மதுரவாயல் முன்னாள் மாநகராட்சி அலுவலகம் எதிரே மழைநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயின் மூடி உடைந்த நிலையில் இருந்தது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் மூலம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் விபத்துக்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. நிரந்தரமாக இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.