செய்யூர் அடுத்த லத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பச்சம்பாக்கம் பாலுார் கிராமத்தில் உள்ள சாலை, 20 ஆண்டுளுக்கு முன் அமைக்கப் பட்டது. அதன் பின்பு பராமரிப்பு இல்லாததால், சாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர்கள், விவசாய வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். சிதிலமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?