தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள நீதிமன்றத்தின் அருகே இருக்கும் சாலை மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுக்கி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பயணிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.