கிருஷ்ணகிரி சேலம் சாலை, சப்-ஜெயில் சாலை, பெங்களூரு சாலை, காந்தி ரோடு, பழைய பேட்டை, ஜக்கப்பன் நகர், கோட்டை தெரு ஆகிய பகுதிகளில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும். பொதுமக்களும் அவதி அடைகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களை துரத்தி கூட்டமாக சேர்ந்து தெருநாய்கள் துரத்தி செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.