செங்கல்பட்டு மாவட்டம். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, கடந்த ஒரு ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக தான் தாம்பரத்தில் உள்ள அனைத்து மழைநீரும் ஏரியில் சென்றடைவதற்கு வழி செய்கிறது. அடுத்து மழை காலம் வர இருப்பதால் சம்பந்தபட்ட நிர்வாகம் இந்தப் பணியினை விரைவாக முடித்து தரும்படி பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.