வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2022-08-08 14:33 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், கருங்குழி சாலை மற்றும் சங்கு மேடு சந்திக்கும் இடத்தில் உள்ள கல்வாய் பகுதி உடைந்த நிலையில் உள்ளது. மேலும் கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த வழியாக நடந்து செல்லவும் வாகனத்தில் செல்லவும் சிரமப்படுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்