விபத்துக்கள் தவிர்க்கப்படுமா?

Update: 2022-08-08 14:26 GMT

சென்னை நெடுஞ்சாலைகளில், ஏராளமான பாதாளச் சாக்கடை மூடிகள் சாலையை விட பள்ளமான இடத்தில் இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. கும்பகோணம் மாநகராட்சியில், இதுபோன்று பாதாள சாக்கடை மூடி அமைந்துள்ள நெடுஞ்சாலைகளில், வெண்மை நிற வண்ணத்தில் வட்டக் குறியீடு செய்து, விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கையை எடுத்துள்ளனர். எனவே சென்னை மாநகராட்சியும், நெடுஞ்சாலை பகுதிகளில் பாதாளச்சாக்கடை மூடி அமைந்திருக்கும் இடங்களில், வெள்ளைநிற வண்ணத்தில், வட்டக் குறீயீடு செய்து விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்